வவுனியா, நொச்சிமோட்டை பாலத்திற்கு அருகில் கேரள கஞ்சா போதைப் பொருளுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணத்திலிருந்து, கதிர்காமம் நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸொன்றை குறித்த பகுதியில் வைத்து நிறுத்தி சோதனைக்குட்படுத்தியபோதே பொலிஸார் கேரள கஞ்சாவுடன் சந்தேக நபரை கைதுசெய்துள்ளனர். 

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் அனுராதபுரம் 21 வயதுடையவர் எனத் தெரிவித்த பொலிஸார் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.