(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.எம்.வஸீம்)

வெட்கம் இருந்தால் சட்டவிரோத அரசாங்கம் தயவுசெய்து ஜனநாயகத்துக்கு மதிப்பளித்து வெளியேற வேண்டும் என தமிழ் முற்போக்கு முன்னணியின் தவைவர் மனோகணேசன் தெரிவித்தார்.பாராளுமன்ற அமர்வு முடிவடைந்த பின்னர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் பாராளுமன்ற உறுப்பினர் அறையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

122 உறுப்பினர்கள் என்பது பெரும்பான்மை என்பதை யாரும் அறிவார்கள். இன்னும் பலர் எங்களுடன் இணைய இருக்கின்றனர். அதுதொடர்பில் எங்களுக்கு தகவல் கிடைத்திருக்கின்றது எனவும் இதன்போது தெரிவித்தார்.