சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட ராமநாதபுரம் மீனவர்கள் நாளை தாயகம் திரும்புவார்கள் என இலங்கை பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.தீபாவளித்திருநாளையொட்டி இலங்கை அரசின் பரிந்துரையின் கீழ் கடந்த 3 ஆம் திகதி யாழ்ப்பாணம் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட  ராமநாதபுரம் புதுக்கோட்டை பகுதிகளைச் சேர்ந்த 28 மீனவர்கள் நாளை கொழும்புவிலிருந்து விமானம் மூலம்  மதுரை விமான நிலையத்துக்கு வந்து சேருவார்கள் என இலங்கை பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.