(ஆர்.யசி, எம்.ஆர்.எம் வசீம்)

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால்  மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமித்தமை மற்றும் அமைச்சரவை நியமனம் ஆகிவற்றுக்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணி கொண்டுவந்த நம்பிக்கையில்லா பிரேரணை சபையில் நிறைவேற்றப்படதை  அடுத்து சபையில் கடும் கூச்சலும் குழப்பங்களும் ஏற்பட்டது. 

இந்நிலையில் சபை ஆரம்பிக்கப்பட்ட போதே மஹிந்த தரப்பில் இருந்து ஐந்து உறுப்பினர்கள் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்துகொண்டனர். 

இந்நிலையில் சபையில் குரல் பதிவு மூலமான வாக்கெடுப்பு நடத்தி நம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்க்கட்சி வெற்றிகொண்ட பின்னர் சபாநாயகர் சபையை  நாளை காலை 10 மணிவரை ஒத்து வைத்தார். 

சபை ஒத்திவைக்கப்பட்ட பின்னர் சபை நடுவில் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் வெற்றிக் களிப்பில் கூச்சலிட்டு ஆரவாரப்படுத்திக் கொண்டிருந்த நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர் விஜித் விஜயமுனி சொய்சா சபைக்கு  வந்த விஜித் விஜயமுனி சொய்சாவை ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் வலுக்கட்டாயமாக கையைப்பிடித்து இழுத்து தமது பக்கம் வரும்படி அழைத்தனர். அத்துடன் ஐக்கிய தேசியக் கட்சியினர் கழுத்தில் போட்டிருந்த துண்டையும் எடுத்து அவருக்கு அணிவித்தனர். 

எனினும் நான் வரமாட்டேன், கையை விடுங்கள் என விஜித் விஜயமுனி சொய்சா பிடியில் இருந்து விடுபட்ட வேளையில் அமைச்சர் பந்துல குணவர்தன சிரித்தபடி வந்து விஜிதமுனி சொய்சாவை அழைத்துக்கொண்டு சபையை விட்டு வெளியேறினார். எனினும் அமைச்சர் எஸ்.பி.திசாநாயக சபையில் இருந்த போதும் அவரைப் பார்த்து கூச்சலிட்ட ஐக்கிய தேசியக் கட்சியினர் கேலியாக வார்த்தைகளை பிரயோகித்தனர். 

இந்நிலையில் அமைச்சர் எஸ்.பி தலையை குனிந்தபடி சபையை இருந்து வேகமாக வெளியேறினார்

மேலதிக படங்கள் ;- இன்றைய தினம் பாராளுமன்றத்தில் நடந்தவை...!