நாட்டில் நிலவிவரும் அதிக வெப்ப நிலை காரணமாக உடற்பயிற்சிகளை செய்ய வேண்டாம் எனவும் இந்த வெப்ப காலநிலையானது எதிர்வரும் நாட்களில் அதிகரிக்கும் எனவும் காலநிலை மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
பகல் பொழுதுகளில் உடற்பயிற்சி அல்லது விளையாடுவது கட்டாயம் என கருதினால் வெப்பத்திலிருந்து பாதுகாப்பு பெறுவதும் அவசியமானதொன்று என விளையாட்டுத் துறையின் மருத்துவ அதிகாரி மருத்துவர் லால் ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
குறிப்பாக குழந்தைகளின் இருதயம் மற்றும் மூளைக்கு பாதிப்பு ஏற்படுவதாகவும் உடலில் நீர் குறைவடைவதனால் இவ்வாறான நிலைமை ஏற்படுவதாகவும் சிறுவர் மருத்துவ நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
கடுமையான வெயிலில் நீண்ட நேரம் இருப்பதனை தவிர்ப்பதுவும், 15 நிமிடங்களுக்கு ஒரு தடவை கட்டாயம் நீரைப் பருகுவதும் முக்கியமானது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மேலும் மழைவீழ்ச்சி இன்மையே அதிக வெப்பத்திற்கு காரணம் எனவும் இன்னும் ஒரு மாதத்தில் எதிர்பார்த்தளவு மழை கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் காலநிலை திணைக்களத்தின் பணிப்பாளர் கே.எச்.எம்.ஜே.பிரேமலால் தெரிவித்துள்ளார்.
இதேவேளை வவுனியா பிரதேசத்தில் அதிகமாக 36.6 பாகை செல்சியஸ் வெப்பநிலை காணப்படுவதாகவும், அனுராதபுரத்தில் 35 பாகையும், கொழும்பில் 32 பாகை செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியிருப்பதாகவும் காலநிலை மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM