அம்பாறை சவளக்கடை பொலிஸ் பிரிவின்கீழ் உள்ள சொறிக் கல்முனையில் துவிச்சக்கரவண்டியில் சென்ற வயோதிபர் மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்த முதியவரை நேற்று வைத்தியசாலையில் சிகிச்சைக்கா அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக சவளக்கடை பொலிஸார் தெரிவித்தனர்.

சொறிக்கல் முனையைச் சேர்ந்த 74 வயதுடைய அந்தோணிப்பிள்ளை அல்போன்ஸ் என்பவரே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

கடந்த 8 ஆம் திகதி உயிரிழந்த முதியவர் துவிச்சக்கரவண்டியில் சென்று கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் சென்றவர் மோதி விபத்துக் குள்ளானதில் முதியவர் படுகாயமடைந்ததையடுத்து மோட்டார் சைக்கிள் சென்றவர் தப்பி ஓடியள்ளார். 

இதனையடுத்து படுகாயமடைந்தவரை பொதுமக்களின் உதவியுடன் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அம்பாறை போதனா வைத்தியசாலைக்கு மற்றப்பட்டு சிகிச்யைளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.