நீண்டகாலமாக தீர்க்கப்படாமல் இருக்கும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டம் இன்று 631 நாட்களை கடந்த நிலையிலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

தமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்டு, கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிக்கண்டறியும் குடும்பங்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் குறித்த போராட்டம் இன்று யாழ்.நல்லூர் முற்றத்தில் இன்று காலை 11 மணியளவில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

நல்லூர் முற்றத்தில் ஆரம்பமான போராட்டம் அங்கிருந்து பேரணியாக சென்று யாழ். நாவலர் வீதியில் உள்ள ஐ.நா. அலுவலகத்தில் அமெரிக்க ஜனாதிபதிக்கான மகஜர் ஒன்றினையும் கையளித்தனர்.