ஶ்ரீலங்கன் விமான சேவையின் புதிய தலைவராக, போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சின் செயலாளர் ஜி.எஸ். விதானகே நியமிக்கப்பட்டுள்ளார்.அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகலவினால் குறித்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நேற்றைய தினம் ஶ்ரீலங்கன் விமான சேவையின் புதிய தலைவராக கபில சந்திரசேன நியமிக்கப்பட்டார். எனினும், அவர் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

ஶ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் தலைவர் ரஞ்சித் பெர்னாண்டோ பதவி விலகியதை அடுத்து, கபில சந்திரசேன நியமிக்கப்பட்டிருந்தார்.

இதனையடுத்தே ஸ்ரீலங்கன் விமான சேவையில் தலைவராக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சின் செயலாளர் ஜி.எஸ். விதானகே நியமிக்கப்பட்டுள்ளார்