(இரோஷா வேலு) 

பாணந்துறை வடக்கு வலான பகுதியில் மோட்டார் சைக்கிளில் ஹெரோயின் போதைப்பொருளுடன் பயணித்த இளைஞரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக  பாணந்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச் சம்பவத்தின் போது 21 வயதுடைய அங்குலான மொரட்டுவ பகுதியைச் சேர்ந்தவர் ஆவார். 

பாணாந்துறை வடக்கு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வலான பகுதியில் வைத்து மோட்டார் சைக்கிளிலொன்றை நிறுத்தி சோதனையிட்ட வேளையிலேயே குறித்த இளைஞர் 100 கிரேம் நிறையுடைய ஹெரோயினுடன் கைதுசெய்யப்பட்டுள்ளார். 

இதனையடுத்து குறித்த நபர் பயணித்த மோட்டார் சைக்கிளும் பாணந்துறை சட்டஅமுலாக்கல் பிரிவு பொலிஸாரால் கைப்பற்றப்பட்டு பாணந்துறை வடக்கு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் அவரை இன்றைய தினம் பாணந்துறை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதோட பாணந்துறை வடக்கு பொலிஸார் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டுள்ளனர்