பெல்ஜியம் தலைநகரான பிரஸ்சல்ஸில் உள்ள விமான நிலையத்தில் நிகழ்ந்த பயங்கர வெடிவிபத்தில் 13 பேர் பலியாகியுள்ளதாகவும் பலர் படுகாயமடைந்துள்ளனர். 

பிரஸ்சல்ஸில் உள்ள  சவேண்டேம் (Zaventem) என்ற விமான நிலையத்தில் சற்று முன்னர் இரண்டு வெடிகுண்டுகள் வெடித்ததை தொடர்ந்து விமான நிலையம் முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்துள்ளது.

இந்த பயங்கர வெடிவிபத்தில் 13 பேர் பலியாகியுள்ளதாகவும் பலர் படுகாயமடைந்துள்ள நிலையில், அதிகாரிகள் உடனடியாக விமான நிலையத்தை மூடியதுடன், அங்கிருந்த பயணிகளை அவசரமாக வெளியேற்றியுள்ளனர்.

மேலும், இந்த விமான நிலையத்திற்கு வந்த பல விமானங்கள் அன்த்வேர்ப் (Antwerp) விமான நிலையத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதோடு ம், சில விமானங்கள் தரையிறங்கவும் முடியாமல், மற்ற விமான நிலையத்திற்கு திருப்பி அனுப்பவும் முடியாமல் லிகே ( Liege ) நகருக்கு மேல் இன்னும் வட்டமடித்து வருகின்றன.

இதன் போது விமான நிலையத்தில் அதிகாரிகள் மேற்கொண்ட சோதனை யில் வெடிக்காமல் இருந்த பல வெடிகுண்டுகளை கண்டுபிடித்து மீட்டுள்ளனர்.

 இதுவரை இத்தாக்குதலுக்கு எந்த  தீவிரவாத இயக்கங்களும் உரிமைகோரியில்லை என்பது குறிப்பிடத்தக்கது.