சட்டவிரோதமாக நியமிக்கப்பட்ட புதிய அரசாங்கம் மற்றும் பிரதமருக்கு எதிராக 122 பாராளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்துள்ளனர் என தெரிவித்துள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின்  தலைவர் இரா.சம்பந்தன் பாராளுமன்றத்தின் இறைமை இதன் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.நாடு சுமூகநிலைமைக்கு திரும்பவேண்டிய தருணம் இதுவெனவும் குறிப்பிட்டுள்ள அவர்  நல்லாட்சி நிலவவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

நாங்கள் சட்டத்திற்கு கட்டுப்பட்டு சரியான  சட்டபூர்வமான விடயங்களில் ஈடுபடவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஒக்டோபர் மாதம் 26 ம் திகதிக்கு பின்னர்  இடம்பெற்றவை அனைத்தும்  சட்டவிரோதமானவை என தெரிவித்துள்ள சம்பந்தன் , நீதிமன்றத்தில் மனுவை நானே தாக்கல் செய்திருந்தேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் நீதித்துறை சுதந்திரமாக இயங்குகின்றது என்பதை நாங்கள் நிரூபித்தோம். இன்று பாராளுமன்றமும் சுதந்திரமானது என நிரூபித்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.