மகிந்த ராஜபக்ச அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு 122 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு அளித்துள்ளனர் என ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

மக்களிற்கும் ஜனநாயகத்திற்கும் கிடைத்த பெரும் வெற்றியென அவர் தெரிவித்துள்ளார்.

வாய்மொழி மூலம் வாக்கெடுப்பின் போது இது உறுதியானது என தெரிவித்துள்ள பிரதமர் 122 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மகிந்த அரசாங்கத்திற்கு எதிராக தாங்கள் வாக்களித்ததை எழுத்து மூலம் உறுதி செய்துள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.

இன்று வாய்மொழி மூல வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை யாராவது எதிர்க்க விரும்பினால் நாளை அவர்கள் அதனை செய்யலாம் என குறிப்பிட்டுள்ள ரணில் விக்கிரமசிங்க  நாங்கள் நாளையும் தோற்கடிப்போம்.

பாராளுமன்றத்தில் மக்களின் ஆணையை உறுதிப்படுத்த வாக்கெடுப்பும் இடம்பெற்றது. மக்களின் ஆணைக்கு பாராளுமன்றத்தில் வெற்றிகிடைத்தது. அதனால் பெயரளவில் இருக்கும் அமைச்சரவைக்கும் கார்போட் அமைச்சர்களுக்கும் எந்த அதிகாரமும் இல்லை. இதனை அரச அதிகாரிகளுக்கும் பொலிஸுக்கும் நினைவுபடுத்திக்கொள்கினறேன். 

அதேபோன்று சபாநாயகரின் தீர்ப்பு தவறு என யாராவது தெரிவிக்க விரும்பினால் இன்று பாராளுமன்றத்துக்கு வந்து பிரேரணையொன்றை முன்வைத்து அதனை அங்கிகரித்துக்கொள்ளலாம். அதனை அங்கிகரித்துக்கொள்ள முடியாவிட்டால், இதனை ஏற்றுக்கொள்ளவேண்டும். ச

பாநாகரின் தீர்ப்பு தவறு என்று யாரும் சொன்னால் அதனை தோற்கடிக்க எங்களிடம் பெரும்பான்மை இருக்கின்றது. அதனால் பாராளுமன்றத்தின் பெரும்பான்மை உறுப்பினர்களின் நிலைப்பாட்டை நாங்கள் உறுதிப்படுத்தியிருக்கின்றோம். அதன் பிரகாரம் சட்டபூர்வமான அதிகாரம் இருப்பது கடந்த 26 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இருந்த அரசாங்கத்துக்காகும். அதன் பிரகாரமே நாங்கள் செயற்படுவோம். 

எனவே எந்த பிரச்சினையும் தடங்களும் இல்லாமல் எங்களுக்கு வாக்களிக்க ஆதரவு வழங்கிய அனைவருக்கும் நன்றி தெரிவிக்கின்றேன் என்றார்.