பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட புதிய அமைச்சர்களுக்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணியினர் முன்வைத்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஆளுந்தரப்பினர் ஏற்றுக் கொள்ளவில்லை என ஈழ மக்கள் ஜனநாயக முன்னணின் தலைவர் டக்ளஸ் தேவனந்தா தெரிவித்தார்.

மேலும் மக்கள் விடுதலை முன்னணியினர் கொண்டு வந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையானது சட்டவிரோதமானதுடன் அதனை பாராளுமன்ற சட்ட திட்டங்களுக்கு அமைவாக ஓரிரு தினங்களின் பின்புதான் நம்பிக்கையில்லா பிரேரணையை முன்வைக்க  முடியும் எனவும் ஆளும் தரப்பு தெரிவித்ததாக அவர் தெரிவித்தார். 

இன்று காலை சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இடம்பெற்ற கட்சித் தலைவர்களின் கூட்த்தில் கலந்துகொண்ட பின்னர் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.