ஜனநாயகத்தின் பண்பையும், நோக்கத்தையும் காப்பதுடன் பாராளுமன்றத்தில் கண்ணியமான முறையில் நடந்து கொண்டு ஜனநாயகமிக்க ஆட்சியை  நிலை நாட்டப்போவதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

மேலும் எமது அரசாங்கம் அண்மையில் அடாவடியாக பறித்தெடுக்கப்பட்டது. எனினும் நாங்கள் அதனை கண்டித்து அமைதியான முறையில் நீதிமன்றத்தை நாடி நாட்டில் ஜனாநாயகத்தை மீண்டும் உறுதிப்படுத்தியிருக்கின்றோம் எனவும் குறிப்பிட்டார்.

இன்று காலை சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இடம்பெற்ற கட்சித் தலைவர்களின் கூட்த்தில் கலந்துகொண்ட பின்னர் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.