சபாநாயகர் அலுவலகத்தின் அழைப்பின் பேரில் இன்று பாராளுமன்றம் கூட்டப்படவுள்ளது.

இன்று காலை 10 மணிக்கு பாராளுமன்றம் கூட்டப்படவுள்ளதாக சபாநாயகர் அலுவலகம் அறிவித்திருந்தது.சபை நடவடிக்கைகளுக்காக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வருகை தந்துள்ளதாகவும் ரணில் விக்கிரமசிங்க வருகை தந்துள்ளதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இதேவேளை, பாராளுமன்ற அமர்வுகளை அவதானிக்க வெளிநாட்டு இராஜதந்திரிகள் பாராளுமன்றத்தில் குழுமியுள்ளனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஐக்கிய தேசியக் கட்சி, முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் முற்போக்குக் கூட்டணி, மக்கள் விடுதலை முன்னணி அகிய கட்சிகளுக்கு ஆகிய கட்சிகளுக்கு பாராளுமன்றத்தில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதி பாதுகாப்பு அதிகாரிகள் பாராளுமன்றப் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் ஆனால் தற்போதுவரை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராளுமன்றத்திற்கு வருகைதரவில்லையெனவும் எமது செய்தியாளர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்றைய பாராளுமன்ற அமர்வில் கலந்துகொள்ள மாட்டார் என சற்று நேரத்துக்கு முன்னர் இடம்பெற்ற சபாநாயகர் தலைமையிலான அனைத்து கட்சித் தலைவர்களின் கூட்டத்தின்போது தெரிவிக்கப்பட்டதாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.