பாராளுமன்ற நிலையியல் கட்டளைகளின் கீழ் சில வரையறைகள் உள்ளன எனவும் அதனை சர்ச்சைக்குரிய ஆளும் தரப்பு அமைச்சர்கள் இன்று விவாதத்திற்கு எடுத்துக் கொள்வதானது சாத்தியமாகாது எனவும் விவாதிக்கப்பட்டதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

இன்று காலை 9:00 மணியளவில் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இடம்பெற்ற கட்சித் தலைவர்களின் கூட்த்தில் கலந்து கொண்ட பின்னர் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர்,

மக்கள் விடுதலை முன்னணியினர் இன்று சட்டத்தை மீறி, சம்பிரதாயத்தை மீறி ஜனாதிபதி நியமித்துள்ள பிரதமரையும் அவர்களுடைய ஏனைய அமைச்சர்களையும் இலக்கு வைத்து ஒரு நம்பிக்கையில்லா பிரேரணையொன்றை தான் சமர்ப்பிப்பதாக அதனை எழுத்து மூலம் சபாநாயகரிடம் விஜித்த ஹேரத் கையளித்தார்.

பாராளுமன்ற நிலையியல் கட்டளைகளின் கீழ் சில வரையறைகள் உள்ளன என்பதை சர்ச்சைக்குரிய ஆளும்தரப்பாகவுள்ள அமைச்சர்கள் அதனை இன்று விவாதத்திற்கு எடுப்பது சாத்தியமாகது என வாதிட்டார்கள்.

அது குறித்து நமது பக்கத்தில் இருந்து குறித்த நிகழ்ச்சி நிரலில் அசாதாரணமான சூழ்நிலையில் இவ்வாறான நிலைமைகளிலே இவ்வாறான நீதிகளை தற்காலிகமாக இடைநிறுத்தி சபையின் பெரும்பான்மையான தீர்மானத்தின் படி விவாதங்களை மேற்கொள் முடியுமென நாங்கள் சுட்டிக் காட்னோம் என ஹக்கீம் மேலும் தெரவித்தார்.