பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட புதிய அமைச்சர்களுக்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணியினர் நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றை சபாநாயகரிடம் சமர்ப்பித்துள்ளனர்.இன்று காலை பாராளுமன்றக் கட்டத்தில் சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் இடம்பெற்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்தின்போதே இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை மக்கள் விடுதலை முன்னணி சார்பாக பாராளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத் கையெழுத்திட்டு சபாநயகரிடம் கையளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.