கடலூர் பாம்பன் இடையே காஜா  புயல் கரையை கடக்கும் போது தனுஷ்கோடி கடல் வழக்கத்துக்கு மாறாக சீற்றத்துடன் காணப்படும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கையை விடுத்துள்ளது.இன்று மாலை 5 மணி முதல் தனுஷ்கோடி பகுதிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு மாவட்ட நிர்வாகம் தடைவிதித்துள்ளது.

இத்தடையால் தனுஸ்கோடி  செல்லும் சுற்றுலா வாகனங்கள் வேர்கோடு பகுதியுடன் நிறுத்தப்படும்,இத்தடையானது மறு உத்தரவு வரும் வரை நீடிக்கும் என மெரைன் போலிஸார் அறிவிப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.