”2 பொயிண்ட் ஓ”  என்ற படம் இம்மாதம் 29 ஆம் திகதி பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட படமாளிகைகளில் வெளியாகவிருக்கிறது. 

2 பொயிண்ட் ஓ படம் தணிக்கை குழுவினரால் பார்வையிடப்பட்டு தணிக்கைச் செய்யப்பட்டது. இந்த படத்திற்கு U/A என்ற சான்றிதழ் அளிக்கப்பட்டிருக்கிறது.

லைகா புரொடக்சன்ஸ் சார்பில் அல்லிராஜா சுபாஷ்கரன் தயாரித்திருக்கும் திரைப்படம் 2 பொயிண்ட் ஓ. இதில் சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பொலிவூட் சுப்பர் ஸ்டார் அக்சய் குமார், ‘தேம்ஸ் தேவதை’ எமி ஜேக்சன். பொலிவூட் நடிகர் சுதான்சு பாண்டே, அடில் ஹுஸைன், மலையாள நடிகர் கலாபவன் ஷாஜன், ரியாஸ் கான் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். எந்திரன் படத்தின் முதல் பாகத்தில் நடித்த ஐஸ்வர்யா ராய் இந்த படத்தில் கௌரவ வேடத்தில் நடித்திருக்கிறார்.

நவம்பர் 29 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட படமாளிகைகளில் வெளியாகவிருக்கும் இந்த படத்தின் தணிக்கை குழுவின் முடிவு வெளியாகியிருக்கிறது. இந்த படத்தைப் பார்த்த தணிக்கை குழுவினர் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் ஆகியோரை பாராட்டியதுடன் இந்த படத்திற்கு U/A  சான்றிதழை வழங்கியிருக்கிறார்கள்.

இதனைத் தொடர்ந்து குறித்த படத்தின் விளம்பரத்தை தமிழகம், இந்தியாவைக்கடந்து வெளிநாடுகளிலும் தொடங்கியிருக்கிறார்கள் படக்குழுவினர் என்பது குறிப்பிடத்தக்கது.