நாட்டில் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கு பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர விசேட உத்தரவொன்றினை பிறப்பித்துள்ளதார்.

பாரா­ளு­மன்­றத்தை கலைத்து ஜனா­திபதி மைத்­தி­ரி­பால சிறி­சேன  விடுத்­தி­ருந்த வர்த்­தமானி அறி­வித்­த­லுக்கு உயர்­ நீ­திமன்றம் இடைக்­கால தடை உத்தரவை நேற்று விதித்­துள்ள நிலையில் சபா­நா­ய­க­ரினால் இன்­று­ காலை 10 மணிக்கு பாரா­ளு­மன்றம் கூட்­டப்­ப­ட­வுள்­ளது. 

இந் நிலையிலேயே நாட்டின் பாதுகாப்பினை கருத்திற் கொண்டு பொலிஸ் மா அதிபரினால் இந்த விசேட அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் உயர் நீதிமன்றத் தீர்ப்பு வெளியாகியுள்ள நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் பாதுகாப்பு பேரவை நேற்றிரவு கூடி சில முடிகளை எடுத்திருந்தது.

இந்த சந்திப்பின்போது பாதுகாப்பு படைகளின் பிரதானி மற்றும் முப்படைகளின் தளபதிகள் பிரசன்னமாகியிருந்தனர். 

இதன்போது பாதுகாப்பை பலப்படுத்துமாறும்  அமைதியான சூழ்நிலையை பேணுமாறும் முப்படையினருக்கும் பொலிஸ் மா அதிபருக்கும்  ஜனாதிபதி ஆலோசனை வழங்கியமையும் குறிப்பிடத்தக்கது.