பாரா­ளு­மன்­றத்தை கலைத்து ஜனா­திபதி மைத்­தி­ரி­பால சிறி­சேன  விடுத்­தி­ருந்த வர்த்­தமானி அறி­வித்­த­லுக்கு உயர்­ நீ­திமன்றம் இடைக்­கால தடை விதித்­துள்ள நிலையில் சபா­நா­ய­க­ரினால் இன்­று­ காலை 10 மணிக்கு பாரா­ளு­மன்றம் கூட்­டப்­ப­ட­வுள்­ளது. 

இதனை சபாநாயகர் அலுவலகம் நேற்றுமாலை உறுதிப்படுத்தியது.

இதனையடுத்து இன்­று ­காலை  8.30   மணியளவில்  பாரா­ளு­மன்ற கட்­டட தொகு­திக்கு வரு­மாறு  சபா­நா­யகர் கரு­ஜ­ய­சூ­ரிய  அனைத்துக் கட்­சி­க­ளி­னதும்  தலை­வர்­க­ளுக்கும்  அழைப்பு விடுத்­துள்ளார்.  

இதன்­போது   ஏற்­க­னவே விடுத்­துள்ள வர்த்­த­மானி  அறி­வித்­தலின் பிர­காரம் இன்று  14 ஆம் திகதி  பாரா­ளு­மன்­றத்தை கூட்­டு­வ­துடன் இன்­றைய தினமே   பெரும்­பான்மை பலத்தை நிரூ­பிப்­ப­தற்­கான   நம்­பிக்கை வாக்­கெ­டுப்பை நடத்­து­வதா என்ற  தீர்­மா­னமும் எடுக்­கப்­ப­ட­வுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. 

அவ்­வாறு கட்சித் தலை­வர்கள் கூட்­டத்தில் நம்­பிக்கை வாக்­கெ­டுப்பை நடத்­து­வ­தற்­கான தீர்­மானம் எடுக்­கப்­பட்டால் இன்­றைய தினம் நம்­பிக்கை வாக்­கெ­டுப்பு நடை­பெறும். இதில் பிர­தமர் மஹிந்த ராஜ­பக்ஷ பெரும்­பான்­மையை நிரூ­பித்தால். அவர் தொடர்ந்து பிர­த­ம­ராக நீடிக்­கலாம். மாறாக ரணில் விக்­கி­ர­ம­சிங்க இந்த நம்­பிக்கை வாக்­கெ­டுப்பில் பெரும்­பான்­மையை நிரூ­பித்தால் அவர் மீண்டும் பிர­த­ம­ராக நிய­மிக்­கப்­ப­ட­வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.