பிரதமர் ராஜபக்ஷ பதவி விலகுவார் என்பது வதந்தியெனவும் அது முற்றிலும் பொய்யானது எனவும் குறிப்பிட்டுள்ள நாமல் ராஜபக்ச நாளைய பாராளுமன்ற அமர்வில் நாங்கள் அனைவரும்  கலந்துகொள்வோம் எனவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பொதுத்தேர்தலை இடைநிறுத்தும் நீதிமன்றத்தின் தீர்ப்பு இறுதி தீர்ப்பல்ல என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தனது டுவிட்டர் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

இது நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பல்ல எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தேர்தல்கள் ஒத்திவைக்கப்பட்டமை குறித்து அரசியல்வாதிகள் இவ்வளவு ஆனந்தமடைந்ததை நான் ஒருபோதும் பார்த்ததில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஐக்கியதேசிய கட்சி பல தேர்தல்களை ஒத்திவைத்துள்ளது என குறிப்பிட்டுள்ள அவர் இறுதியில்  பொதுமக்கள் தீர்மானிப்பார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.