ஆரோக்கிய கேட்டிற்கு வழிவகுக்கிறதா பசி?

Published By: Digital Desk 4

13 Nov, 2018 | 10:07 PM
image

பசி வந்தால் பத்தும் பறந்து போகும் என்பார்கள் முன்னோர்கள். ஆனால் பசி வந்தால் அதுவே ஆரோக்கியத்திற்கும் கேடு உண்டாகும் என்கிறார்கள் வைத்தியர்கள்.

ஆச்சரியமாக உள்ளதா ? ஆம் பசி எடுத்தால் சாப்பிடுவது தான் சரியானது. ஆனால் அந்த பசி உங்களுடைய உடலின் சத்து குறைந்ததால் ஏற்படும் பசி என்றால் சாப்பிடுவது நல்லது. ஆனால் பசியில்லாமல் பசித்தால்...? புரியவில்லையா.

பசியில் இரண்டு வகைகள் உள்ளது. ஒன்று உண்மையான பசி. மற்றொரு உண்மையற்ற பசி. அதாவது பொதுவாக உணவின் மணத்தாலும், உணவை கண்ணால் பார்ப்பதாலும், உணவை ருசிப்பதாலும் எம்முள் பசி உணர்வு எழும். ஒரு சிலருக்கு பசியிருக்காது. ஆனால் மனச்சோர்வின் காரணமாகவோ அல்லது மனத்தின் ஒட்டம் காரணமாகவோ உண்மையற்ற பசி எழும். இதன்போது நாம் சுவைக்காக சாப்பிட்டுவிடுகிறோம். இது தான் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கிறது.

இந்த உண்மையற்ற பசி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையினதான வழியில் வரக்கூடும். இத்தகைய உண்மையற்ற பசியைக் கண்டுணர்ந்து அந்த தருணத்தில் சாப்பிடாமல் குறிப்பாக அதிக கலோரிகளைக் கொண்ட கார்ப்பரோஹைட்ரேட்டுகள் கொண்ட உணவை சாப்பிடாமல் இருந்தால் நாம் சர்க்கரை நோய், இரத்த அழுத்தம் போன்ற பாதிப்புகளிலிருந்து தற்காத்துக் கொள்ளலாம்.

அதே போல் பசி எடுக்கும் போது குறைவான கலோரிகள் கொண்ட உணவு வகைகளை தெரிவு செய்து சாப்பிடுவது புத்திசாலித்தனம் என்று பரிந்துரைக்கிறார்கள் வைத்தியர்கள். ஆனால் உண்மையற்ற பசியின் போது நீங்கள் எதையும் சாப்பிடாமல் கட்டுப்பாடுடன் இருக்கவேண்டும்.

அதே போல் சிலர் ஒரு குறிப்பிட்ட கால அவகாசத்தை நிர்ணயித்துக கொண்டு பசிக்கிறதோ இல்லையோ அந்த கால அவகாசத்தில் தவறாமல் சாப்பிடும் வழக்கத்தைக் கொண்டிருப்பர். அவர்களுக்கு தான் இத்தகைய உண்மையற்ற பசி அதிகமாக வருவதாக தெரிவிக்கிறார்கள் வைத்திர்கள். அதனால் பசி எடுத்தவுடன் சாப்பிடவேண்டும். அந்த பசி உடலின் இயக்கத்திற்கு தேவையான பசி தானா? என்பதையும் உறுதி செய்து கொண்டே சத்துள்ள உணவுகளை சாப்பிடவேண்டும்.

டொக்டர் சிறிதேவி

தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அதீத கொழுப்பு பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2024-04-18 17:30:48
news-image

ஈஸோபாகல் அட்ராஸியா எனும் உணவு குழாய்...

2024-04-17 17:43:31
news-image

நுரையீரல் உயர் குருதி அழுத்த பாதிப்பிற்குரிய...

2024-04-16 17:40:01
news-image

ஓடிடிஸ் மீடியா எனும் நடு காதில்...

2024-04-15 16:27:12
news-image

சிஸ்டிக் ஃபைப்ரோசிஸ் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-15 02:57:12
news-image

ஹீட் ஸ்ட்ரோக் எனும் பாதிப்பிற்குரிய சிகிச்சை

2024-04-12 01:31:06
news-image

பிறவி அட்ரீனல் ஹைப்பர்பிளேசியா எனும் சுரப்பியில்...

2024-04-10 22:59:16
news-image

ரூமாடிக் ஹார்ட் டிஸீஸ் எனும் இதய...

2024-04-09 17:25:41
news-image

யாழில் புற்றுநோய் அதிகரிப்பு ! கடந்த...

2024-04-09 09:37:01
news-image

கை நடுக்கம் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-08 18:33:54
news-image

உலக ஆரோக்கிய தினத்தில் உறுதி கொள்வோம்!

2024-04-08 10:00:07
news-image

டெஸ்டிகுலர் கேன்சர் எனும் விரைசிரை புற்றுநோய்...

2024-04-05 20:56:29