“கிடைத்த வெற்றியானது ஜனநாயகத்திற்கும் மக்கள் சக்திக்கும் கிடைத்த வெற்றியாகும்” என சஜித் பிரேமதாஸ ஊடகங்ளுக்கு கருத்து வெளியிட்டுள்ளார்.

சற்று முன்னர் பிரதமர் நீதியரசர் உள்ளிட்ட மூவர் அடங்கிய நீதிபதிகள் குழாமினால் வழங்கப்பட்ட தீர்ப்பையடுத்து உச்ச நீதிமன்ற வளாகத்தில் குழுமியிருந்த உள்ளூர் மற்றும் சர்வதேச ஊடகவியலாளர்களுக்கு கருத்து வெளியிட்ட சஜித் பிரேமதாஸ மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் இங்கு கருத்து வெளியிட்ட சஜித் பிரேமதாஸ,

“இன்று வழங்கப்பட்டுள்ள தீர்ப்பின் மூலம் இந் நாட்டின் சுயாதீன நீதித்துறையின் செயற்பாடு வெளிப்பட்டுள்ளது.

நாட்டின் நீதி மகுடம் சூடியுள்ளது. தீர்ப்பின் மூலம் எமக்கு மீண்டும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

இத் தீர்ப்பிற்கு மதிப்பளித்து ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றியை அனைவரும் மிக அமைதியாக கொண்டாடுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என தெரிவித்ததோடு 

நாளை பாராளுமன்றம் கூடலாம் எனவும் தெரிவித்துள்ளார்