(இரோஷா வேலு) 

முகநூல் வாயிலாக பெண்களுடன் நட்புறவாகி அவர்களிடம் புகைப்படங்களை பெற்றுக்கொண்டு அவற்றை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றுவதாக அச்சுறுத்தி பணம் பறித்து வந்த பலஸ்தீன பிரஜையொருவரை நீர்கொழும்பில் வைத்து பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

குறித்த நபரை கங்கொடவில நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போது நீதிவான் அவரை எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.  

நீர்கொழும்பில் பெண்ணொருவரை ஏமாற்றி பணம் பறிக்க குறித்த நபரால் அனுப்பப்பட்டிருந்த இன்னுமொரு சந்தேகநபர் பொலிஸாரிடம் மாட்டிக்கொண்ட நிலையில், அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் மூலமே இவர் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.