(இராஜதுரை ஹஷான்)

உரிமையையும், அபிவிருத்தியையும் வடக்கு மக்கள் ஒருங்கே பெற வேண்டுமாயின் புதிய அரசாங்கத்தினை ஏற்படுத்த ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என விவசாயத்துறை இராஜாங்க அமைச்சர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில்,

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, 2015 ஆம் ஆண்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை கடந்த மூன்று வருடகாலமாக நிறைவேற்ற முடியவில்லை என்று குறிப்பிட்டே மக்களாட்சியினை மீண்டும் நிலைநாட்ட புதிய ஆட்சி மாற்றத்தினை ஏற்படுத்தினர். 

இந் நிலையில் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதிகள் ஒரு கட்சிக்கு ஆதரவாக செயற்படுவதை விடுத்து  நாட்டின்  பிரச்சினைகளுக்கு தீர்வு காண முன்வர வேண்டும்.