ஹட்டன் நகரில்  சூரசம்ஹாரம்

Published By: T Yuwaraj

13 Nov, 2018 | 05:06 PM
image

தமிழ் கடவுளான முருகப் பெருமானை நோக்கி அனுஷ்டிக்கப்படுகின்ற விரதங்களில் மிகவும் முக்கியமான விரதம் கந்த சஷ்டி விரதமாகும். இந்த விரதம் கடந்த 8 ஆம் திகதி ஆரம்பமாகியது. 

சரவணப் பொய்கையில் ஆறு திருமுகங்களுடன் அவதரித்த முருகனை நோக்கி ஆறு தினங்களுக்கு இந்த விரதம் அனுஷ்டிக்கப்படும். இந்த கந்த சஷ்டி விரதத்தின் இறுதி நாளான இன்று முருகப் பெருமான் மூல மூர்த்தியாக வீற்றிருந்து அருள் பாலிக்கின்ற ஆலயங்களில் சூரன் போர் இடம்பெற்றது.

அந்தவகையில் மலையகத்தில் ஹட்டன் நகரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி விரதத்தின் சூரசம்ஹாரம் இன்று செவ்வாய்க்கிழமை ஆலயத்தில் நடைபெற்றது.

வசந்த மண்டப பூசைகள் இடம்பெற்று முருகப் பெருமான் உள்வீதி வலம் வந்து பின்னர் சூரபத்மனுடன் போர் செய்வதற்கு வெளிவீதி சென்று சூரசம்ஹாரம் இடம்பெற்றது.

அந்த வகையில் இவ்வாலயத்தில் நடைபெற்ற சூரசம்ஹார நிகழ்வில் பெருமளவான பக்தர்கள் கலந்து கொண்டு தங்களுடைய விரதத்தினை நிறைவேற்றிக் கொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் மாநாடு

2023-05-31 12:51:59
news-image

ஏறாவூர் நகரசபை வளாகத்தில் மரநடுகை தினம்

2023-05-31 11:54:16
news-image

நான் ஃபெமினிஸ்ட் கிடையாது - ஐஸ்வர்யா...

2023-05-31 11:19:34
news-image

தென்கோவை கற்பகப் பிள்ளையார் ஆலய வருடாந்த...

2023-05-31 10:46:30
news-image

உலக அமைதிக்கான மக்களின் எழுச்சி :...

2023-05-29 22:20:32
news-image

அல் - ஹாபிழ் அஸ்மி சாலியின்...

2023-05-29 11:35:51
news-image

இளைய தலைமுறை ஆற்றலாளர் விருது 2023

2023-05-29 11:33:01
news-image

புதிய அலை கலை வட்ட இலக்கியப்...

2023-05-29 11:06:54
news-image

தென் இந்திய பண்ணிசை பாவலர்

2023-05-28 17:00:31
news-image

கிழக்கு ஆளுநர் தலைமையில் திருகோணமலையில் தேசிய...

2023-05-28 16:47:31
news-image

மலேசியாவில் பன்னாட்டு வர்த்தகர்கள் மாநாடு :...

2023-05-28 12:46:40
news-image

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தொற்றா நோய் தொடர்பான...

2023-05-28 11:50:17