அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் பரவி வரும் காட்டுத் தீயில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் மேற்படி காட்டுத் தீயினால் 2,50,000 பேர் வரை இடம்பெயர்ந்து நிர்ப்பந்தத்துக்குள்ளாகியுள்ளனர்.

இந் நிலையில் ரெபேக்கா என்ற பெண்ணொருவர் இந்த காட்டுத் தீயிற்கிடையே கடந்து வந்து அசத்தியுள்ளார்.

ஹொலிவுட் திரைப்பட காட்சிகளுக்கு நிகராக இருக்கும் இந்த காணொளி சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

அத்துடன் இந்த காட்டுத் தீ பரவலினால் இதுவரை 200 க்கும் மேற்பட்டடோர் மாயமாகி உள்ளதுடன் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் தீக்கிரையாகியுள்ளன. 

மேலும் காணாமல்போனோர்களை தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.