சுவிட்சர்லாந்தின், ஜெனீவா நகரில் இளஞ்சிவப்பிலான வைரக்கல் ஒன்று 50 மில்லியன் டொலருக்கு ஏலம் போயுள்ளது.

10 காரட் எடை கொண்ட இந்த வைரக்கல் நீள் சதுரவடிவம் கொண்ட இந்த வரைக்கல் கடந்த 100 ஆண்டுகளுக்கு முன்பு தென் ஆப்பிரிக்க சுரங்கத்தில் இது கண்டு பிடிக்கப்பட்டது. 

பொதுவாக வைரங்கள் வெள்ளை நிறத்தில் தான் இருக்கும். ஆனால் இந்த வைரம் அரிய இளஞ்சிவப்பு நிறத்தில் காணப்படுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.