இலங்கையில் தற்போது நிலவிவரும் அரசியல் ஸ்திரமற்ற நிலையில், அண்மையில் நடைபெற்ற மக்கள் கூட்டமொன்றில், இலங்கையின் தேசியக் கொடியில் தமிழ்,முஸ்லிம் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் மஞ்சள் மற்றும் பச்சை நிறங்களை நீக்கிய சர்ச்சைக்குரிய கொடியை பயன்படுத்தப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் ஹர்ச டி சில்வா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் முன்னாள் அமைச்சர்  ஹர்சா டி சில்வா தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ளார்.

மேலும் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,  

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேடையில் அமர்ந்திருக்கையில் குறித்த  கொடியைப் பயன்படுத்தி இருப்பது உண்மையில் வெட்கப்பட வேண்டிய ஒரு விடயமாகும்.

அத்தோடு, குறித்த கொடியை இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி, தற்போதைய ஜனாதிபதியால் பிரதமராக நியமிக்கப்பட்ட சில தினங்களிலேயே இவ்வாறான பக்க, இன சார்பான செயற்பாடுகளில் ஈடுபடுவது, சர்வதேச ஊடகங்களின் கவனத்தை ஈர்த்துள்ளமை முக்கிய அம்சமாகும்.