பாராளுமன்றத்தை ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன கலைத்தமைக்கு ஆதரவாக இன்று ஐந்துபேர்  உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளனர்.

பேராசியர் ஜிஎல் பீரிஸ் உதயகம்மன்பில வாசுதேவ நாணயக்கார உட்பட ஐவர் இந்த மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்

ஜனாதிபதியினால் பாராளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிரான மனுக்களை உயர் நீதிமன்றம் இன்று ஆராய்ந்து வருகின்ற நிலையிலேயே ஜனாதிபதியின் முடிவு சரியானது என வாதிடும் மனுக்கள் தாக்கல் செய்யப்ட்டுள்ளன.

ஜனாதிபதியினால் பாராளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிரான மனுக்களை ஆராய்ந்து வரும் உயர்நீதிமன்றம் இன்று தனது முடிவை அறிவிக்கவுள்ளது