ஏ.டி.பி - 2018 இறுதிச் சுற்று டென்னிஸ் சம்பியன்ஷிப் போட்டில் ஹெவிட் பிரிவின் லீக் போட்டியில் ரோஜர் பெடரரை நிஷிகோரி வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார்.

டென்னிஸ் தரவரிசையில் முதல் எட்டு இடங்களை பிடித்துள்ள வீரர்கள் மாத்திரம் பங்கேற்றுள்ள ஏ.டி.பி - 2018 இறுதிச் சுற்று டென்னிஸ் சம்பியன்ஷிப் போட்டி கடந்த 11 ஆம் திகதி லண்டனில் ஆரம்பமாகியுள்ளது.

எதிர்வரும் 18 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ள இந்த போட்டித் தொடரின் ‘ஹெவிட்’ பிரிவில் நடந்த லீக் போட்டியில் உலக டென்னிஸ் தரவரிசையில் மூன்றாவது இடத்தில் இருக்கும் சுவிட்சர்லாந்து நாட்டின் வீரர் ரோஜர் பெடரரை, தரவரிசையில் 9 ஆவது இடத்தில் இருக்கும் ஜப்பான் நாட்டு வீரர் நிஷிகோரி எதிர்த்தாடினார்.

சுமர் 1:27 மணிநேரம் நடத்த இந்த ஆட்டத்தில் நிஷிகோரி -6 (7-4), 6-3 என்ற நேர் செட் கணக்கில் பெடரரை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தார்.

அத்துடன் ‘குயர்டன்’ பிரிவில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் உலக தரவரிசையில் 5 ஆவது இடத்தில் உள்ள ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் 7-6 (7-5), 7-6 (7-1) என்ற நேர்செட்டில் 7-ம் நிலை வீரரான குரோஷியாவைச் சேர்ந்த மரின் சிலிச்சை தோற்கடித்தார். இந்த ஆட்டம் 2 மணி 6 நிமிடம் நீடித்தமையும் குறிப்பிடத்தக்கது.