ஐக்கியதேசிய கட்சியின் தலைமை பொறுப்பை ஏற்பதற்கும் பிரதமர் வேட்பாளராக போட்டியிடுவதற்கும் நான் தயார் என சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

பிபிசியின் சிங்கள சேவைக்கு கருத்து வெளியிடுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

உரியநடைமுறைகள் பின்பற்றப்பட்டால் நான் எந்த பொறுப்பையும் ஏற்க தயார் என அவர் தெரிவித்துள்ளார்.

கட்சியின் தற்போதைய தலைமைத்துவத்தின் ஆதரவும் ஏனையவர்களின் ஆதரவும் கிடைத்தால் எந்த பொறுப்பையும் ஏற்க தயார் என சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

கட்சி தலைவராவதற்கு வேறு எந்த நேர்மையற்ற ஜனநாயக விரோத வழிமுறைகளையும் பின்பற்றதயாரில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.