எகிப்தின் தொல்பொருள் ஆராச்சியாளர்கள் சுமார் 6 ஆயிரம் வருடம் பழைமைவாய்ந்த நகரமான மெம்ஃபிஸ் டசின் கணக்கான மரத்தினால் செதுக்கப்பட்ட 100 பூனைகளின் சிலைகளையும், பூனைகளின் கடவுளாக பழங்காலத்தில் கருதப்பட்ட பஸ்டட் சிலையையும் கண்டுபிடித்துள்ளனர். 

இந்த கண்டுபிடிப்பின் மூலம் எகிப்தியர்கள் தமது வாழ்வில் பூனைகளுக்கு எந்தளவு தூரம் முக்கியத்துவம் கொடுத்தார்கள் என்பது தெரியவருவதுடன், இதன் மூலம் எகிப்துக்கு சுற்றுலா பயணிகள் அதிகபடியாக வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அத்துடன் அங்குள்ள கல்லறைகளை ஆராய்வதின் மூலம் எகிப்தின் வளங்கள் மற்றும் நாகரிக வளர்ச்சியை பற்றி நாம் தெரிந்துகொள்ள சான்றாக அமையும் எனவும் மீண்டும் எகிப்தில் உள்ள பழங்கால கட்டமைப்பின் பிரம்மாண்டத்தை உலகுக்கு தெரியபடுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது தொடர்பில் ஸ்மித்ஸோனியன் அருங்காட்சியகத்தில் பணியாற்றிய கியூரேட்டர் அன்டொனிட்டா கேட்டான்சாரிடி,  இதுவரை பலநூறு பூனைகளின் மம்மிகள் கிடைத்ததாகவும், அவைகள் ராஜாங்கத்தை பாதுகாக்கவும், புனிதத்தை பாதுகாக்கவும் கொல்லப்பட்டன எனவும் தெரிவித்தார்.

அத்துடன் ஆராய்ச்சியாளர்கள் வேறு சில மிருகங்களையும் கைப்பற்றினர். அங்கு மரப் பாம்புகள், முதலைகள், வண்டுகள் என பல வகை மம்மிகள் உள்ளதாக மொஸ்தஃவ்வா வாசிரி,எகிப்திய சுப்பிரிம் ஜெனரல் தொல்பொருள் அமைச்சரகம் கூறியது.