நிதஹாஸ் பொதுஜன பெரமுன என்ற புதிய கூட்டணியை அமைக்க சிறிசேன- மகிந்த இணக்கம்

Published By: Rajeeban

13 Nov, 2018 | 10:21 AM
image

நிதஹாஸ் பொதுஜன பெரமுன என்ற புதிய  கூட்டணியை அமைத்து பொதுத்தேர்தலில் இணைந்து போட்டியிடுவதற்கு ஜனாதிபதி சிறிசேனவும் மகிந்த ராஜபக்சவும் இணக்கப்பாட்டிற்கு வந்துள்ளனர்.

நேற்றிரவு சிறிசேனவிற்கும் மகிந்தராஜபக்சவிற்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பொன்றின் போது இது குறித்த இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் வெளியேறி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்து வருகின்ற ஒரு சூழ்நிலையில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நிதஹாஸ் பொதுஜன பெரமுன ன கூட்டணிக்கு பெயரிடப்பட்டுள்ளது ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கும் பொதுஜன பெரமுனவிற்கும் இடையிலான கூட்டணியை குறிக்கும் வகையில் அமைந்துள்ளது.

எனினும் இந்த யோசனையை இரு தலைவர்களும் இன்னமும் தங்கள் கட்சிகளின் சிரேஸ்ட தலைவர்களிடம் சமர்ப்பிக்கவில்லை எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவர்கள் சிலர் கட்சியின் பெயரின் கீழ் போட்டியிடவேண்டும் என கருத்து வெளியிட்டுள்ளனர்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:02:42
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32