பாராளுமன்றம் கலைப்புக்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணைகள் உயர் நீதிமன்றத்தில் இடம்பெற்று வருகின்ற இந்நிலையில் தற்போது நீதி மன்றத்திற்கு பலத்த பாதுாகப்பு வழங்கப்பட்டுள்ளது.ஜனாதிபதியினால் பாராளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான பரிசீலனை முடிவினை இன்று உயர் நீதிமன்றம் அறிவிக்கவுள்ளது.

பாராளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக 17 அடிப்படை மனித உரிமை மீறல் மனுக்கள் நேற்று உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. 

அரசியல் கட்சிகள் சார்பிலும் சிவில் அமைப்புக்கள், சிவிலியன்கள் சிலர் சார்பிலும் இந்த 17 மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டன.

இந்நிலையில் நேற்று மாலையாகும் போது அதில் 13 மனுக்கள் விசாரணைகளுக்காக தயார் நிலையில் உயர் நீதிமன்ற பதிவாளரால் நீதிமன்றுக்கு மாற்றப்பட்டிருந்தன. 

இதில் 10 மனுக்கள் மீதான விசாரணை கள் நேற்று இடம்பெற்றன. ஏனைய மனுக்கள் மீதான விசாரணைகள் இன்று இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.