எம்.ஆர்.எம்.வஸீம்)

ஜனவரி 05ஆம் திகதி இடம்பெறவுள்ள பாராளுமன்ற பொதுத்தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் மற்றும் சுயாதீன குழுக்கள் கட்டுப்பணம் வைப்பிலிடுவது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கின்றது. 

அதனடிப்படையில், பாராளுமன்ற தேர்தல் சட்டத்தின் 16ஆவது அத்தியாயத்தின் கீழ் சுயாதீன குழுக்கள் தத்தமது வேட்புமனு தாக்கலின்போது ஒவ்வொரு வேட்பாளருக்கும் 2ஆயிரம் ரூபா என்ற அடிப்படையில் கணக்கிட்டு தெரிவத்தாட்சி அதிகாரியிடம் வைப்பிலிடவேண்டும். அத்துடன்  ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசியல் கட்சிகள் கட்டுப்பணம் வைப்பிலிடக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கட்டுப்பணங்களை பெற்றுக்கொள்வதற்காக குறிப்பிட்ட மாவட்ட செயலகத்தில் அல்லது மாவட்ட தேர்தல் காரியாலயத்தில் அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

ஒவ்வொறு தேர்தல் தொகுதிக்கும் தெரிவுசெய்துகொள்ளப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கு மேலதிகமாக இரண்டு வேட்பாளர்களின் பெயர்களை வேட்புமனுவில் குறிப்பிடவேண்டும்.