(எம்.மனோசித்ரா)

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியிலிருந்து யார் விலகினாலும், அல்லது யார் இணைந்து கொண்டாலும் கட்சியை கவிழ்க்க முடியாது என தெரிவித்த கட்சியின் பொதுச் செயளாலர் ரோஹண லக்ஷ்மன் பியதாச, அரசியலில் கட்சித்தாவுதல் என்பது ஒரு யதார்த்தமான விடயமாகும் எனவும் குறிப்பிட்டார்.

மேலும் ஐக்கிய தேசிய கட்சி அல்லது ஐக்கிய தேசிய முன்னணி என யார் தடையாக வந்தாலும் நாட்டில் காணப்படும் ஏனைய அரசியல் கட்சிகள், கல்விமான்கள், புத்திஜீவிகள் மற்றும் சிவில் பிரதிநிதிகள் என அனைவரையும் ஒன்றிணைத்து தேர்தலில் வெற்றியை உறுதிப்படுத்துவோம் எனவும் அவர் தெரிவித்தார். 

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி காரியாலத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பி கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.