வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட மாணவி தற்கொலைக்கு முயற்சி

Published By: Robert

22 Mar, 2016 | 11:27 AM
image

மூன்று வரு­டங்­க­ளுக்கு முன்னர் பாலியல் வல்­லு­ற­வுக்கு உட்­ப­டுத்­தப்­பட்ட 16 வயது மாண­வி­யொ­ருவர் மண்­ணெண்ணெய் அருந்தி தற்­கொ­லைக்கு முயற்­சித்த சம்­பவம் ஒன்று மாதம்­பையில் இடம்­பெற்­றுள்­ளது . மேற்­படி மாணவி சிலாபம் வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­ட­டுள்ளார். இவ­ரிடம் மேற்­கொள்­ளப்­பட்ட விசா­ர­ணை­களின் போது கடந்த மூன்று வரு­டங்­க­ளுக்கு முன்னர் தனது அயல் வீட்டு நண்பி ஒரு­வரின் பாட்­டனால் பாலியல் வல்­லு­ற­வுக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டுள்ள விடயம் தெரிய வந்­தி­ருப்­ப­தாக மாதம்பை பொலிஸார் தெரி­வித்­தனர்.  மாதம்பை பொலிஸார் பாட­சாலை மட்­டத்தில் நடத்­தி­வரும் சிறுவர் துஷ்­பி­ர­யோகச் சம்­ப­வங்­க­ளி­லி­ருந்து தப்­பிப்­பது மற்றும் அச்­சம்­ப­வங்கள் தொடர்பில் விளக்­க­ம­ளிக்கும் செய­ல­மர்வில் கலந்து கொண்­டி­ருந்த குறித்த மாணவி பின்னர் வீட்­டுக்குச் சென்று இவ்­வாறு மண்­ணெண்ணெய் அருந்­தி­யி­ருப்­ப­தாக பொலிஸார் தெரி­வித்­தனர்.

தற்­போது 16 வயது நிரம்­பிய குறித்த மாணவி கடந்த மூன்று வரு­டங்­க­ளுக்கு முன்னர் தனது நண்­பியின் அயல் வீட்­டுக்கு கல்வி நட­வ­டிக்­கை­க­ளுக்­காகச் சென்று வரு­வதைப் பழக்­க­மாகக் கொண்­டி­ருந்­துள்ளார்.  சம்­பவம் இடம்­பெற்ற சமயம் அவ்­வாறு தனது நண்பி வீட்­டுக்கு இம்­மா­ணவி சென்ற சமயம் அங்கு நண்­பியின் பாட்டன் மாத்­தி­ரமே இருந்த­தா­கவும், அப்­போது 13 வய­து­டைய இச்­சி­று­மியை நண்­பியின் பாட்டன் பல­வந்­த­மாக வீட்டு அறை­யொன்­றினுள் கூட்டிச் சென்று இவ்­வாறு பாலியல் வல்­லு­ற­வுக்கு உட்­ப­டுத்­தி­யி­ருப்­ப­தா­கவும், அச்­ச­மயம் இச்­சம்­பவம் அச்­சி­று­மிக்கு அவ்­வ­ளவு பார­தூ­ர­மா­ன­தாகத் தெரிந்­தி­ருக்­க­வில்லை எனவும், குறித்த சந்­தேக நப­ரினால் விடுக்­கப்­பட்ட அச்­சு­றுத்தல் கார­ண­மாக இதனை அச்­சி­றுமி வெளியில் எவ­ரி­டமும் கூறி­யி­ருக்­க­வில்லை எனவும் மேற்­கொள்­ளப்­பட்ட விசா­ர­ணை­களின் போது தெரி­ய­வந்­தி­ருப்­ப­தாக பொலிஸார் தெரி­வித்­தனர்.

பாட­சாலை மாண­வர்­க­ளுக்­காக பொலிஸார் நடத்­திய செய­ல­மர்வின் போது தனக்கு நேர்ந்த கொடுர நிலை நினை­வுக்கு வந்து தான் துர்ப்­பாக்­கிய நிலைக்கு உள்­ளா­கி­யி­ருப்­பதைப் புரிந்து கொண்­ட­தனால் மன­வி­ரக்­திக்கு உள்­ளான இம்­மா­ணவி வீட்­டுக்கு வந்து மண்­ணெண்ணெய் அருந்தி தற்­கொலை செய்து கொள்ள முயன்­றி­ருப்­பது அம்­மா­ண­வி­யிடம் பெற்றுக் கொண்ட வாய்­மொ­ழியின் ஊடாகத் தெரி­ய­வந்­தி­ருப்­ப­தா­கவும் பொலிஸார் மேலும் தெரி­வித்­தனர்.

குறித்த மாண­வியை இவ்­வாறு வல்லுறவுக்கு உட்படுத்திய சந்தேக நபர் காக்கப்பள்ளி மணக்குளம் பிரதேசத்தில் வசிப்பவர் எனவும், அவர் தற்போது பிரதேசத்தை விட்டுத் தலைமறைவாகியிருப்பதாகவும் அவரைக் கூடிய விரைவில் கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டிருப்பதாகவும் மாதம்பை பொலிஸார் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காசாவில் நிலைமை மோசம் - இலங்கை...

2025-03-22 16:31:19
news-image

பலஸ்தீனர்களுக்கு எதிரான அநீதிகளுக்கு அரசு கண்டனம்...

2025-03-22 15:28:51
news-image

வவுனியா சிறைச்சாலையிலிருந்து கைதி ஒருவர் தப்பியோட்டம்

2025-03-22 17:27:21
news-image

கொழும்பு - கண்டி வீதியில் இரு...

2025-03-22 16:51:04
news-image

உள்ளூராட்சி மன்ற தேர்தல் ஈ.பி.டி.பியின் வெற்றிக்கான...

2025-03-22 16:43:17
news-image

தெவிநுவர துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் “பாலே...

2025-03-22 16:20:17
news-image

ஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது

2025-03-22 15:52:03
news-image

கொட்டாஞ்சேனையில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் கைது

2025-03-22 15:43:21
news-image

ஹங்வெல்லவில் கோடாவுடன் ஒருவர் கைது

2025-03-22 15:33:58
news-image

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த ஜப்பான் கப்பல்

2025-03-22 15:09:57
news-image

மன்னார் பள்ளமடு - பெரிய மடு...

2025-03-22 14:04:20
news-image

போதைப்பொருள் கடத்தல் காரருடன் நெருங்கிய தொடர்புகளைப்...

2025-03-22 13:30:47