பாகிஸ்தானில் விமானமொன்று தரையிறங்கும்போது அதன் இரு சக்கரங்களிலும் எதிர்பாராத விதமாக காற்று வெளியேறியமையினால் ஓடு பாதையை கடந்து சென்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

பாகிஸ்தானின் கராச்சி நகரில் இருந்து பஞ்ச்குர் நகருக்கு பயணித்த பாகிஸ்தானிய சர்வதேச ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான  விமானமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

எனினும் இந்த விபத்தின் போது விமானத்தில் பயணித்த 48 பயணிகள் உட்பட அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர்.

விமானம் தரையிறங்கும்போது ஓடு பாதையின் தரைப்பரப்பு மிக மோசமான நிலையில் இருந்தமையின் காரணத்தினால்தான் விமானத்தின் சக்கரங்களில் இருந்து காற்றி வெளியேறியது என தகவல்கள் கூறுகின்றன.

விபத்து பற்றி தகவல் அறிந்ததும் மீட்பு பணியாளர்களும், தீயணைப்பு படை வீரர்களும் விரைந்து வந்து மீட்பு பணிகளை மேற்கொண்டு பயணிகளை விமானத்திலிருந்து வெளியேற்றினர்.