(நா.தினுஷா)

இனிவரும் எந்தவொரு தேர்தல்களிலும் ஐக்கிய தேசிய கட்சி வெற்றிபெறப் போவதில்லை என்றும் மக்கள் ஆணைக்கு பயந்து பொது தேர்தலை தடுத்து நிறுத்துவதற்காகவுமே ஐக்கிய தேசிய கட்சி நீதிமன்றத்தை நாடியுள்ளதென குறிப்பிட்ட பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார்.

இதேவேளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தீர்மானத்திற்கமைய தற்போதைய அரசியல் பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ள பொதுத் தேர்தலை தவிர வேறு எந்த மாற்று வழிமுறைகளும் இல்லையெனவும் அவர் தெரிவித்தார்.

நெலும் மாவத்தையில் அமைந்துள்ள பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,  

நாட்டில் தற்போது உள்ள பிர்சசினைகளுக்கு தீர்வினை பெற்றுக்கொப்பதற்கான புதிய மாற்று கொள்கைகளை மஹிந்த ராஜபக்ஷ உருவாக்கியுள்ளதோடு, பிரதமர் பதவியையும் நிதி அமைச்சு பொறுப்பினையும் ஏற்று 36 மணித்தியலாயங்களில் அதற்கான தீர்வினையும் பெற்றுக்கொடுத்துள்ளார். கடந்த அரசாங்கம் சர்வதேசத்துடன் நாட்டை பேரம் பேசியே ஆட்சிபுரிந்து. இதனை தடுத்துநிறுத்த ஒருவருட காலம் காத்திருக்க முடியாது. பிர்ச்சினைகளில் இருந்து பாதுகாப்பதற்காகவே ஜனாதிபதி பாராளுமன்றத்தை கலைத்தார் என்றார்.