பாராளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பான உயர்நீதிமன்ற அறிவிப்பு இன்று பிற்பகல் 2 மணிக்குப்பின்னர் அறிவிக்கப்படவுள்ளது.

பாராளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ் முற்போக்குக் கூட்டணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் உட்பட தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் இன்று உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்திருந்தனர்.

இந்நிலையில் குறித்த அடிப்படை உரிமை மீறல் மனு வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதா அல்லது இல்லையா என்ற  அறிவிப்பு இன்று பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் நீதிமன்றத்தினால் அறிவிக்கப்படவுள்ளது.

ஜனாதிபதியினால் பாராளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரணை செய்வதற்கு பிரதம நீதியரசர் உட்பட மூன்று நீதிபதிகள் நியமிக்கப்பட்டடுள்ளனர். 

அதன்படி பிரதம நீதியரசர் நளின் பெரேரா, உயர் நீதிமன்ற நீதிபதிகளான பிரியந்த ஜயவர்தன, மற்றும் பிரசன்ன ஜயவர்தன ஆகியோர் முன்னிலையில் மனுகள் ஆராயப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.