இலங்கை சுற்றுலா அபிவிருத்திப் பணியகம் டெல்மா நிறுவனத்துடன் இணைந்து இங்கிலாந்து மற்றும் இலங்கை அணியினர் பங்குகொள்ளும் கிரிக்கட் போட்டிகளை கண்டு களிப்பதற்காக இலங்கை வரும்  ரசிகர்களுக்கு இலங்கை தேனீரை வழங்க முன்வந்துள்ளது.

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி பணியகத்தினால் முன்னெடுக்கப்படும்  கரும பீடத்தின் ஊடாக இலங்கை தேயிலையின் மாதிரியினை பெறுவதுடன் இலங்கை தேநீரை சுவைப்பதற்கான தருணம் ஒன்று வழங்கப்பட்டுள்ளது.

நீண்டதூர பயணத்தின் பின்னர் களைப்படைந்த சோர்வு நிலையில் உள்ள பயணிகளுக்கு வழங்கப்படும் இனிய சூடான தேனீர் அவர்களுக்கு புதிய உற்சாகத்தை ஏற்படுத்துகிறது. 4 ஆம் திகதி முதல் 6ஆம் திகதி நவம்பர் 2018 வரையிலான மூன்று நாள் காலப்பகுதியினுள் சுமார் 10 ஆயிரம் ரசிகர்களுக்கு தேனீர் வழங்கப்பட்டுள்ளதாக பதிவாகியுள்ளது.