ஐக்கிய தேசியக் கட்சி, உயர்ஸ்தானிகர்களைவிட்டு நீதிமன்றத்தை நாடியது நல்லதொரு தீர்மானமே எனும் அது நீதிமன்றத்திற்கு தற்போது அழுத்தம் கொடுக்க விளைகின்றதென உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ் முற்போக்குக் கூட்டணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் உட்பட தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் இன்று உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்திருந்தனர்.

இதன் போது நீதிமன்ற வளாகத்திற்கு வந்திருந்து உதய கம்மன்பில ஊடகங்களுக்கு இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு ஊடகங்களுக்கு மேலும் தெரிவிக்கையில்,

பாராளுமன்றத்தை கூட்டி பிரச்சினையையேற்படுத்துவதைக் காட்டிலும் தேர்தலுக்குப் போய் மக்களின் ஆணையின் படி பாராளுமன்றததை அமைப்பதே சிறந்தது.

உயர்ஸ்தானிகர்களை விட்டுவிட்ட ஐக்கிய தேசியக் கட்சி நீதிமன்றத்தை நாடியுள்ளமை வரவேற்கத்தக்க விடயமாகும் எனினும் ஐக்கிய தேசியக் கட்சி நீதிமன்றத்திற்கு அழுத்தம் கொடுப்பதற்கு விளைகின்றது.

ஐக்கிய தேசியக் கட்சியினர் நினைக்கின்றனர் அவர்களுக்கு சார்பாக தீர்ப்பு கிடைக்குமென்று ஆனால் சட்டத்திற்கு முரணாக எதுவும் இடம்பெறாது. சட்டத்திற்குட்பட்டே நடைபெறும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.