இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது இருபதுக்கு 20 சர்வதேச கிரிக்கெட போட்டியில் மேற்கிந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் நிறைவில் 3 விக்கெட்டுக்களை இழந்து 181 ஓட்டங்களை பெற்றது. 

சென்னை, சிதம்பரம் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமான இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கியது.

சிம்ரன் ஹேட்மெயர் மற்றும் ஷெய் ஓப் இணைந்து சிறந்த ஆரம்பத்தை பெற்றுக் கொடுத்தனர். அதற்கமைவாக முதல் 5 ஓவர்களில் 38 ஓட்டத்தையும் 6 ஆவது ஓவர் நிறைவில் 51 ஓட்டத்தையும் அணி பெற்றுக் கொண்டது. 

ஆடுகளத்தில் ஷெய் ஓப் 24 ஓட்டத்துடனும், சிம்ரன் ஹேட்மெயர் 22 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர். எனினும் 6.1 ஆவது ஓவரில் ஷெய் ஓப் 24 ஓட்டத்துடன் சஹாலுடைய வந்து வீச்சில் ஆட்டமிழக்க, 8 ஆவது ஓவரின் இறுதிப் பந்தில் சிம்ரன் ஹெட்மெயர் 26 ஓட்டத்துடன் ஆட்டமிழந்து வெளியேறினார்.

இரண்டாவது விக்கெட்டுக்காக பிராவோ மற்றும் ரம்டின் ஜோடி சற்று நேரம் தாக்குப் பிடித்தாலும் ரம்டின் 15 ஓட்டத்துடன் 12.5 ஆவது ஓவரில் வொஷிங்டன் சுந்திருடைய பந்தில் போல்ட் முறையல் அட்டமிழந்தார்.

இதனைத் தொடர்ந்து நிக்கலஷ் பூரண் களமிறங்க இந்திய அணி 14 ஆவது ஓவரில் 100 ஓட்டங்களை கடக்க ஆடுளத்தில் பூரண் அதிரடி காட்ட ஆரம்பிக்க 18 ஆவது ஓவரில் அணி 150 ஓட்டங்களை பெற்றது.

தொடர்ந்தும் போட்டியில் அதிரடி காட்டிய நிக்கலஷ் பூரன் 24 பந்துகளை எதிர்கொண்டு 4 நான்கு ஓட்டம், 4 ஆறு ஓட்டம் உள்ளடங்களாக அரைசதம் கடந்தார்.

இறுதியாக இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 3 181 ஓட்டங்களை பெற்றது. 

பிராவோ 43 ஓட்டத்துடனும், பூரன் 53 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர். இதன் மூலம் இந்திய அணிக்கு வெற்றியிலக்காக 182 ஓட்டம் நிர்ணயிக்கப்பட்டது.