(நா.தினுஷா)

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வீழ்ச்சிப் பாதைக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறசேனவே காரணமாகிவிட்டார் எனத் தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார், ஜனாதிபதி தனது பதவியை தக்க வைத்துக்கொள்ள முன்னெடுத்த பொறிமுறையில் தானாகவே சிக்கிக் கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

மேலும் மக்களின் ஆணைக்கு எதிராக ஜனாதிபதி மேற்கொள்ளும் பொருத்தமற்ற சூழ்ச்சிகளை சட்டரீதியில் முறையடித்து நாட்டில் சுபீட்சமான ஆட்சியை உருவாக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

அலரிமாளிகையிலே இன்று ஐக்கிய தேசிய கட்சியினர் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.