(இராஜதுரை ஹஷான்)

மக்களின் கோரிக்கைகளுக்கு அமையவே  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பொதுஜன பெரமுனவின் உறுப்புரிமையினை பெற்றுள்ளார் என தெரிவித்த பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர்  சாகல காரியவசம். பொதுஜன பெரமுன, ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி தற்போது ஒன்றிணைந்துள்ளது ஆகவே இடம்பெறவுள்ள பாராளுமன்ற தேர்தலின் எச் சின்னத்தில் போட்டியிடுவது குறித்து கலந்துரையாடல்களின் பின்னரே உரிய தீர்மானத்திற்கு வரமுடியும் எனவும் தெரிவித்தார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வில்  கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இடைக்கால அரசாங்கத்தில் இரண்டு  கட்சிகளும் ஒன்றிணைந்துள்ளது. இதற்காக பொதுஜன பெரமுனவின் தனிப்பட்ட கொள்கைகளை ஒரு போதும்  விட்டுக் கொடுக்க முடியாது.  மஹிந்த ராஜபக்ஷ பொதுஜன பெரமுனவின்  சார்பாகவே பிரதமராக பதவி  ஏற்றார் எனவும் இதன்போது அவர் குறிப்பிட்டார்.