(எம்.மனோசித்ரா)

பொதுத் தேர்தலில்  எச் சின்னத்தில் போட்டியிடுவது குறித்து ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி இன்னும் தீர்மானம் எதையும் மேற்கொள்ளவில்லை. எனினும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு சார்பில் பொது வேட்பாளர் ஒருவரை களமிறக்கும் நிலைப்பாட்டிலேயே இருப்பதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயளாலர் ரோஹன லக்ஷ்மன் பியதாச தெரிவித்தார். 

மஹிந்த ராஜபக்ஷ பொதுஜன பெரமுனவின் தலைமைத்துவத்தினை ஏற்றுள்ளமை அவரது தனிப்பட்ட விருப்பமாகும். அது குறித்து எம்மால் கருத்து தெரிவிக்க முடியாது எனவும் கூறினார். 

பிரதமர் மஹிந்தராஜபக்ஷ இன்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்புரிமையை ஏற்றுக் கொண்டிருந்த நிலையில் எதிர்வரும் ஜனவரி பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நிலைப்பாடு தொடர்பில் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.