(இரோஷா வேலு) 

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க பிரிவு அதிகாரிகளால்  தங்க பிஸ்கட்டுகளை சிகரெட் பெட்டிகளில் மறைத்து வைத்து நாட்டுக்குள் கடத்த முயற்சித்த விமான நிலைய பணியாளர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக சுங்க ஊடக பிரிவு தெரிவிக்கின்றது. 

இச் சம்பவத்தின் போது விமான நிலையத்தில் கடமையாற்றி வரும் 60 வயதுடைய வயோதிபர் ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். 

தங்க பிஸ்கட்டுகளை வெற்று சிகரெட் பெட்டியினுள் மறைத்து வைத்து கடத்த முயற்சித்தபோதே சுங்க பிரிவு அதிகாரிகளினால் கைதுசெய்யப்பட்டார்.

அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட 650 கிராம் நிறையுடைய ஆறு பிஸ்கட்டுகளின் பெறுமதியாது 4,235,660 ரூபாவாகும்

கைதுசெய்யப்பட்ட வரை விசாரணைகளுக்குட்படுத்தியிருந்த நிலையில் ஒரு இலட்சம் ரூபா தண்டப்பணம் விதித்ததோடு, தங்க பிஸ்கட்டுகள் அனைத்து சுங்க பிரிவினரால் பறிமுதல் செய்தமையும் குறிப்பிடத்தக்கது.