(நா.தனுஜா)

ஜனாதிபதியினால் தற்போது பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளமை மற்றும் தொடர்ந்து வரும் அரசியல் நெருக்கடிநிலை என்பன இலங்கையின் ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தலாக அமையும் என நாம் கருதுவதுடன், அதன் பொருளாதாரத்திலும் பாரிய பின்னடைவினை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது என சுவிட்ஸர்லாந்து எச்சரிக்கை விடுத்துள்ளது.

இவ்விடயம் தொடர்பில் சுவிட்ஸர்லாந்தின் வெளிவிவகாரத் திணைக்களம் வெளிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

நாட்டின் ஜனநாயகத்தின் எதிர்காலம் மற்றும் கடந்த காலத்தில் முன்னெடுக்கப்பட்டுவரும் நல்லிணக்க செயற்பாடுகள் என்பவற்றையும் நாட்டின் தற்போதைய நிலை பாதிக்கும். 

எனவே நாட்டின் அனைத்துக் கட்சிகளும் சட்டத்திற்கமைவாக செயற்பட வேண்டும் என்பதுடன், சிறந்த அரசாங்கத்திற்குரிய கோட்பாடுகளுக்கு முக்கியத்துவம் அளித்து செயற்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளது.